துருக்கி நிலநடுக்கம் - தன்னுடைய சிறுநீரை குடித்து 94 மணிநேரம் உயிர் பிழைத்த நபர்... - வெளியான தகவல்...!

Syria Turkey Earthquake
By Nandhini Feb 11, 2023 11:54 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

துருக்கி நிலநடுக்கத்தில் சொந்த சிறுநீரை குடித்து 94 மணிநேரம் உயிர் பிழைத்த நபர் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

துருக்கி நிலநடுக்கம்

கடந்த திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

turkey-earthquake-drinking-own-urine

சொந்த சிறுநீரை குடித்து உயிர் பிழைத்தவர்

துருக்கியில் நிலநடுக்க இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்ட அட்னான் முஹம்மத் கோர்குட் என்ற இளைஞன் உயிர் பிழைப்பதற்கான கடைசி இடமாக தனது சொந்த சிறுநீர் குடித்துள்ளார். நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பிறகு, இந்த 17 வயது சிறுவன் 94 மணி நேரம் உயிர் பிழைப்பதற்காக தனது சிறுநீரையே குடித்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது துருக்கியின் காசியான்டெப்பில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் மருத்துவமனையில் கூறுகையில்,

நிலநடுக்கம் ஏற்பட்டபோது நான், எனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன். நிலநடுக்கத்தில் என் மீது இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் நான் சிக்கிக்கொண்டேன்.

இந்த சமயத்தில் எனனை நான் வலுவாகவும், உயிருடனும் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தேன். என்னிடம், உணவும் தண்ணீரும் இல்லை. எனவே, அவர் எனது சிறுநீரை குடித்தேன்.

நான் தூங்குவதைத் தடுக்க ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கும் தனது தொலைபேசியின் அலாரத்தை வைத்தேன். ஆனால், 2 நாட்களில் என் போனின் பேட்டரி தீர்ந்து விட்டது என்றார்.

இவர் 4 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.