இடிபாடுகளில் சிக்கிய தன் குழந்தைகளை மீட்க பாசப் போராட்டம் நடத்திய நாய்... - வீடியோ வைரல்...!
இடிபாடுகளில் சிக்கிய தன் குட்டிகளை மீட்க பாசப் போராட்டம் நடத்திய நாயின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துருக்கி நிலநடுக்கம்
துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் துருக்கியில் கடந்த திங்கட் கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின.
மத்திய துருக்கியில் 9.9 கிமீ ஆழத்தில் தாக்கியது. பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர். இந்த நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நேற்றும் 5-வது முறையாக துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

தன் குழந்தைகளை மீட்க போராடிய நாய்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இடிபாடுகளில் சிக்கிய தன் குட்டிகளை மீட்க தாய் நாய் ஒன்று பாசப் போராட்டம் நடத்தியது. குட்டிகளை காப்பாற்ற அந்த தாய் நாய் மண்ணை தோண்டி தன் குட்டிகளை மீட்க போராடியது.
இதைப் பார்த்த ஒருவர் இடிபாடுகளில் சிக்கிய நாய் குட்டிகளை மீட்டு பத்திரமாக ஒரு இடத்திற்கு எடுத்துச் சென்று விடுகிறார். பசியோடு இருந்த குட்டிகளுக்கு அந்த தாய் நாய் பாலூட்டியது.
தற்போது பாசப்போராட்டம் நடத்திய தாய் நாயின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
So much has got to me regarding the devastating impact the earthquake has had in Turkey, but this had me bawling ? pic.twitter.com/GbGZ4LWJes
— Kirst (@Kirst23x) February 8, 2023