துருக்கி, சிரியா நிலநடுக்கம் - உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

Syria Death Turkey Earthquake
By Thahir Feb 09, 2023 02:43 AM GMT
Report

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

துருக்கில் உள்ள காசியான்டெப் நகரத்தில் அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

காசியாடெப் என்ற நகரம் துருக்கின் தென் கிழக்கிலும், சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

turkey-earthquake-death-increase

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியா நாட்டில் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

உயிரிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது 

இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் ஏராளமானோர் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,391 ஆக உயர்ந்துள்ளது. சிரியாவில் 2,992 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.