துருக்கியில் இன்னும் தீராத பிணவாடை - இறப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது...!

Turkey Earthquake
By Nandhini Feb 25, 2023 11:12 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளது.

துருக்கி நிலநடுக்கம்

கடந்த பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். பல அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிலநடுக்கத்தில் கீழே இடிந்து விழுந்து தரைமட்டமாயின.

இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் படுகாயமடைந்துள்ளனர்.

turkey-earthquake-death-crosses-50k

இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளது. இந்த பேரழிவு நிலநடுக்கத்தால், 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இவர்களுக்கு வீடுகளை மீண்டும் கட்டும் பணியை துருக்கி தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5,20,000 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட 1,60,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து கடுமையாக சேதமடைந்தன.

இது தொடர்பாக துருக்கியின் ஜனாதிபதி தையிப் எர்டோகன் பேசுகையில், ஒரு வருடத்திற்குள் வீடற்றவர்களுக்கு வீடுகளை மீண்டும் கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளார். தற்போது வீடற்றவர்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். ஆனால் கூடாரங்களில் வசதிகள் பற்றாக்குறையாக உள்ளது.

இடிந்த மலைகளை அகற்ற பெரும் பணம் தேவைப்படுகிறது. 1999ல் வடமேற்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு இந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 210 மில்லியன் டன் வரை இடிபாடுகளை உருவாக்கியுள்ளது என்றார். யது என்று UNDP மதிப்பிடுகிறது.