துருக்கியில் நிலநடுக்கம் - கோடிக்கணக்கில் உதவிக்கரம் நீட்டிய சீனா...!

China Turkey Earthquake
By Nandhini 1 மாதம் முன்

நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த துருக்கி அரசுக்கு சீனா அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

துருக்கியில் நிலநடுக்கம்

நேற்றிலிருந்து துருக்கி மற்றும் சிரியாவில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து வரையிலும் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் பலகட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிந்துள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டியுள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கனோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

turkey-earthquake-china-extended-helping-hand

உதவிக்கரம் நீட்டிய சீனா

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பேரழிப்பை எதிர்கொண்டுள்ள துருக்கி அரசுக்கு சீனா உதவிக்கரம் நீட்டியுள்ளது. தற்போது, முதல் தவணையாக 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.46 கோடி) சீனா அவசர நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.   

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.