கடவுள் சார் நீங்க... இடிபாடுகளில் மீட்கப்பட்ட குழந்தையை நெஞ்சோடு அணைத்து முத்தமிட்ட வீரர்...!
துருக்கி நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் மீட்கப்பட்ட குழந்தையை நெஞ்சோடு அணைத்து முத்தமிட்ட வீரர் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா முழுவதும் உள்ள நகரங்களில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
1939ம் ஆண்டுக்குப் பின் துருக்கியைத் தாக்கிய மிக மோசமான பேரிழப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

காப்பாற்றிய குழந்தை முத்தமிட்ட வீரர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், துருக்கி நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையை வீரர் ஒருவர் தன் நெஞ்சோடு அணைத்து, குழந்தையின் தலையை தடவி கன்னத்தில் முத்தமிட்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த உலக மக்கள் கடவுள் சார் நீங்கள்... மனிதநேயம் இறந்து போகவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Firefighters rescued a one-year-old girl from the rubble in #earthquake-hit southern #Turkey. #Pray for #Turkey and #Syria ???#PalYouth pic.twitter.com/rfrB7ZyJEH
— PalYouth (@PalYouth4News) February 9, 2023