துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது : கவிஞர் வைரமுத்துவின் உருக்கமான வரிகள்

Vairamuthu Turkey Earthquake
By Irumporai 1 மாதம் முன்
Report

துருக்கியில் நேற்று மற்றும் இன்று 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல் சிரியாவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், துருக்கியில் தற்போது 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தால் பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த இடிபாடுகளை சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்பு குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது அதே சமயம் துருக்கி நாட்டிற்கு உலக நாடுகள் பலவும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன,

அந்த வகையில் இந்தியாவும் தனி விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்பு படையினரை அனுப்பி வைத்தது. துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தல் பல்லாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் அவர்களுக்கு உலக நாடுகளில் உள்ள பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில்

துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது

ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன

மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன

மாண்டவன் மானுடன்;

உயிர் பிழைத்தவன் உறவினன் உலக நாடுகள் ஓடி வரட்டும்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.