4 நாட்களாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 8 வயது சிறுமி - துரிதமாக மீட்ட இந்திய வீரர்கள்

India Turkey Syria Turkey Earthquake
By Thahir Feb 11, 2023 05:42 AM GMT
Report

துருக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 8 வயது சிறுமியை இந்திய வீரர்கள் துரிதமாக மீட்டனர்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாக கொண்டு திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் துருக்கி மற்றும் சிரியா நிலைகுலைந்தது.

turkey-earthquake-8-year-old-girl-rescue

அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நகரில் இருந்த ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிகாலை நிகழ்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி இரவு பகலாக தொடர்ந்து வருகிறது. மீட்பு பணிகளில் இந்தியாவில் இருந்து சென்ற 152 பேர் கொண்ட மீட்பு படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுமியை பத்திரமாக மீட்ட இந்திய வீரர்கள் 

இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்களை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர் மீட்பு படையினர்.

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை என்பது 24 ஆயிரத்தை கடந்துள்ளது என சிட்னி மார்னிங் ஹெரால்டு என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

turkey-earthquake-8-year-old-girl-rescue

இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட காசியான்டெப் மாகாணத்தின் நுர்டஹி பகுதியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 8 வயது சிறுமியை  தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

முன்னதாக நேற்று 6 வயது இந்திய மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டனர். துருக்கியில் இந்திய மீட்புக்குழுவினர் இதுவரை 2 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.