துருக்கி பேரழிவு ; 2 வாரத்தில் 6040 முறை நிலநடுக்கம் - வெளியான அதிர்ச்சி தகவல்…!
கடந்த 2 வாரங்களில் துருக்கியில் 6040 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். பல அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிலநடுக்கத்தில் கீழே இடிந்து விழுந்து தரைமட்டமாயின.
இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் படுகாயமடைந்துள்ளனர்.

2 வாரத்தில் 6040 முறை நிலநடுக்கம்
இந்நிலையில், இது குறித்து துருக்கி நாட்டு பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, துருக்கியில் கடந்த 2 வாரங்களில் 6040 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில், 5-6 ரிக்டர் அளவு கோலில் 40 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 3.84 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் பலி எண்ணிக்கை 46000த்தை கடந்துள்ளது. இவ்வாறு, துருக்கி நாட்டின் பேரிடர் மேலாண்மைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
#Colored balloons among the ruins of the devastation caused by the #earthquakes in #Turkey to remember those #children who died in the #earthquake... ???? #TurkeyEarthquake pic.twitter.com/DL5WcgJAFn
— ?? ?? Turkey Türkiye (@HispanatoliaEN) February 19, 2023