இன்று துருக்கி மாலத்யாவில் மீண்டும் நிலநடுக்கம் - வெளியான அதிர்ச்சி தகவல்...!
இன்று துருக்கி மாலத்யாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா முழுவதும் உள்ள நகரங்களில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 1939ம் ஆண்டுக்குப் பின் துருக்கியைத் தாக்கிய மிக மோசமான பேரிழப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று துருக்கி மாலத்யாவில் மீண்டும் நிலநடுக்கம்
துருக்கி மாலத்யாவில் மீண்டும் நிலநடுக்கம் இந்நிலையில், துருக்கியில் உள்ள மலாத்யாவிலிருந்து 19 கிமீ தொலைவில் ஐரோப்பிய மத்திய தரைக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை நில அதிர்வு மையம் (EMSC) ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 2 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக EMSC தெரிவித்துள்ளது
An earthquake of magnitude 4.6 on the Richter scale occurred 19 km SW of Malatya in Turkey, the European Mediterranean Seismological Centre (EMSC) announced in a post on Twitter.#TurkeySyriaEarthquake #Turkey #TurkeyEarthquake #TurkeyQuake #turkeyearthquake2023 #TurkeySyria pic.twitter.com/PqMU1pGQFu
— First India (@thefirstindia) February 10, 2023