துருக்கி நாட்டின் பெயர் மாற்றம், ஒப்புதல் வழங்கிய ஐ.நா : புதிய பெயர் என்ன?

Turkey
By Irumporai Jun 03, 2022 05:21 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

துருக்கி நாட்டின் பெயரை துருக்கியே என்று மாற்றம் செய்ய ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்யக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டு அரசாங்கத்தால் முடிவெடுக்க பட்டுள்ளது. அதனால் துருக்கி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் நாட்டின் பெயர் மாற்றம் குறித்து கோரிக்கை விடுத்தது.

இதன் காரணம் உலக அளவில் துருக்கி நாட்டின் மதிப்பை அங்கீகரிக்கவே துருக்கியே என மாற்ற அந்நாட்டு அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் அறிவித்தார்.

துருக்கி நாட்டின் பெயர் மாற்றம், ஒப்புதல் வழங்கிய ஐ.நா : புதிய பெயர் என்ன? | Turkey Changes Name Un Approval

இது குறித்து அவர் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அனுப்பியிருந்த கோரிக்கை மனுவில், ‘துருக்கி’ மற்றும் ‘துர்க்கி’ போன்ற வார்த்தைகளுக்கு பதில் ‘துர்க்கியே’ என்ற சொல்லை பயன்படுத்துவது குறித்து உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று அனுப்பியிருந்தார்.

இதுகுறித்த ஒப்புதலுக்காக துருக்கி காத்திருந்த நிலையில் தற்போது ஐக்கிய நாடுகள் சபை துருக்கி என்ற நாட்டின் பெயரை துருக்கியே என்று மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.