துருக்கியில் தற்கொலைப்படை தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு.. அச்சத்தில் பொதுமக்கள்

By Irumporai Nov 14, 2022 03:42 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நேற்று மக்கள் நடமாட்டமும் , கடைகளும் அதிகமுள்ள பகுதியில் நேற்று தீடீரென குண்டு வெடிப்பு நடந்தது, இந்த குண்டு வெடிப்பில் இது வரை 6- பேர் பலியாகியுள்ளதாகவும், இது வரை 81 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி குண்டு வெடிப்பு

இந்த குண்டு வெடிப்பானது துருக்கி நேரப்படி ,மாலை 4:20 மணிக்கு இந்த குண்டு வெடிப்பு நடந்தது என்று இஸ்தான்புல் கவர்னர் அலி யெர்லிகாயா கூறியுள்ளார். இதற்கு முன்பு 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

துருக்கியில் தற்கொலைப்படை தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு.. அச்சத்தில் பொதுமக்கள் | Turkey Bombing Attack Suspect Arrested

தற்போது நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில்இஸ்தான்புல் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக துருக்கி அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ,மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்‌ஷி தெரிவித்துள்ளார்.