துருக்கி நிலநடுக்கம்; காணாமல் போன இந்திய இளைஞரின் உடல் மீட்பு
துருக்கி நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி இந்திய இளைஞர் விஜய் குமார் என்பவர் உயிரிழந்துள்ளார்.
28 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை
கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாலை நிகழ்ந்த இந்த கோர நிலநடுக்கத்தால் அனைத்து கட்டிடங்களும் இடிந்து விழுந்து தரைமட்டாகின.
இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை என்பது 28 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தொடர்ந்து மீட்பு பணி என்பது இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பணி நிமித்தமாக துருக்கி சென்றிருந்த இந்தியர் ஒருவர் மாயமானதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தியர் உடல் மீட்பு
உத்தரக்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் 36 வயதாகவும் இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே இவர் நிறுவனத்தின் சார்பில் ஜனவரி 22 ஆம் தேதி துருக்கி சென்றுள்ளார். அங்கு மலாட்யா என்ற பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார்.
இவரது உடலில் ஓம் என்ற டாட்டூவை வைத்து இவர் தான் ராஜ் குமார் என்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து துருக்கியில் உள்ள இந்திய துாதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விரைவில் உடல் இந்தியா கொண்டுவரப்படும் என துாதரகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த விஜய் குமார் என்பவருக்கு பிங்கி கவுர் என்ற மனைவியும், 6 வயது குழந்தையும் உள்ளனர்.