கலைந்தது ஆட்சி .. அதிகாரத்தை கையில் எடுத்த அதிபர்.. பதற்றத்தில் துனிசியா!
துனிசியாவில் அரசை கலைத்து, நிர்வாகத்தை தானே கையில் எடுப்பதாக அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் தெரிவித்துள்ளார்
ஆப்ரிக்கா நாடான துனிசியாவில் அரசு கலைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றமும் கலைக்கப்படுவதாகவும் அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அரசின் நிர்வாகத்தை தானே எடுக்க இருப்பதாக கூறியுள்ள சையத் அரசின் நிர்வாகத்தை கவனிக்க பிரதமர் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
துனிசியாவில் ஆட்சிக்கலைப்பு முடிவை ஆதரிக்கும் வகையில் துனிசிய நகரங்களில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டு வீசி கலைத்தனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான துனிசியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதாக அந்நாட்டு மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததன் காரணமாக அந்நாட்டு அரசை கலைத்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி துனிசியா பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டுஅந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கலைப்பு காரணமாக துனிசியா நாட்டில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. .