துனிஷாவின் தற்கொலை - கைதான காதலனுக்கு ஆதரவாக குரல்கொடுத்த கவர்ச்சி நடிகை உர்ஃபி ஜாவேத்....!
துனிஷாவின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காதலன் ஷீசன் கானுக்கு ஆதரவாக பிரபல கவர்ச்சி நடிகை உர்ஃபி ஜாவேத் குரல் கொடுத்துள்ளார்.
பிரபல நடிகை துனிஷா தற்கொலை
‘ஷர்மா அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’, ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை துனிஷா (20). இவர் கடந்த சனிக்கிழமை தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே நடிகை துனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக துணை நடிகரும், துனிஷாவின் காதலருமான ஷீசன் கானை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது மகள் மரண வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷீசன் கான் போதைப்பொருள் உட்கொள்வதாக உயிரிழந்த தொலைக்காட்சி நடிகை துனிஷா ஷர்மாவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
கவர்ச்சி நடிகை உர்ஃபி ஜாவேத் ஆதரவு
துனிஷாவின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காதலன் ஷீசன் கானுக்கு ஆதரவாக பிரபல கவர்ச்சி நடிகை உர்ஃபி ஜாவேத் குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில்,
"ஒரு நபர் தனது சொந்த விருப்பத்திற்கு மாறாக ஒருவருடன் இருக்க கட்டாயப்படுத்த முடியாது. துனிஷா விஷயத்தில் ஷீசன் ஏமாற்றியிருக்கலாம். ஆனால் துனிஷாவின் மரணத்திற்கு அவரைக் குறை கூற முடியாது. "பெண்களே, நான் யாரையும் திரும்பத் திரும்பச் சொல்லவில்லை. உங்கள் விலைமதிப்பற்ற வாழ்க்கையை விட்டுக் கொடுப்பது மதிப்புக்குரியது.
சில சமயங்களில் இது உலகத்தின் முடிவாகத் தோன்றலாம். உங்களை நேசிக்கும் நபர்களைப் பற்றி சிந்தியுங்கள். உங்களை நேசிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் சொந்த ஹீரோவாக இருங்கள். தயவு செய்து சிறிது நேரம் கொடுங்கள். தற்கொலை செய்து கொண்ட பிறகும் துன்பம் தீரவில்லை. பின் தங்கியவர்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.