துனிஷாவின் இறுதிச் சடங்கிற்கு செல்ல விரும்புகிறீர்களா? - போலீசாரிடம் கதறி அழுத காதலன் ஷீசன் கான்...!
மறைந்த நடிகை துனிஷா ஷர்மாவின் முன்னாள் காதலர் ஷீசன் கான், அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்ல விரும்புகிறீர்களா என்று போலீசார் கேட்டதற்கு, ஒரு பெண் அதிகாரியின் முன் கதறி அழுதுள்ளார்.
பிரபல நடிகை துனிஷா தற்கொலை
‘ஷர்மா அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’, ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை துனிஷா (20).
இவர் 2 நாட்களுக்கு முன்பு தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே நடிகை துனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக துணை நடிகரும், துனிஷாவின் காதலருமான ஷீசன் கானை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசாரிடம் கதறி அழுத காதலன் ஷீசன் கான்
வாலிவ் காவல்நிலையத்தில் ஷீசனை விசாரித்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில்,
விசாரணைக்கு முன்பு ஷீசன் கான் அமைதியாக இருந்தார், நேற்று வரை அவரது உடல் மொழியைப் பார்த்து யூகிக்க கடினமாக இருந்தது. ஆனால், நேற்று இரவு அவர் அழ ஆரம்பித்தார். துனிஷா இறுதிச் சடங்கிற்குச் செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டபோது அவர் கதறி அழுதார்.
ஷீசனின் வாக்குமூலத்தை தற்போது பதிவு செய்துள்ளோம். ஏனென்றால், அவர் முன்பு கொடுத்த வாக்குமூலங்களில் வேறுபாடுகள் இருந்தன.
துனிஷா ஷர்மாவுக்கும், ஷீசன் கானுக்கும் இடையே உறவில் இருந்த அவர்கள் 15 நாட்களுக்கு முன்புதான் பிரிந்தனர். துனிஷாவின் பிரேத பரிசோதனை வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது. துனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இடத்திலிருந்து அனைத்தையும் பதிவு செய்துள்ளோம்.
ஷீசானிடம் விசாரணை நடத்தப்படும்போதும், அவர் தனது வாக்குமூலத்தை வாபஸ் பெற முடியாத வகையில் அவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. உடலை கைப்பற்ற போலீசார் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது.
சடலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதை மருத்துவமனை அதிகாரிகளிடம் இருந்து போலீசார் அறிந்து கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக எந்த சர்ச்சையும் ஏற்படாமல் இருக்க, போலீசார் எல்லாவற்றையும் படம் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.
சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலய வாகன பாதுகாப்பு நிலையத்தில் அதிகரித்த கட்டணம் அறவீடு: பக்தர்கள் விசனம் IBC Tamil
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil