தற்கொலை செய்த நடிகை துனிஷா ஷர்மா கர்ப்பமா...? - தீயாய் பரவும் பகீர் தகவல்...!
படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்த நடிகை துனிஷா ஷர்மா கர்ப்பமாக இருந்ததாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை துனிஷா தற்கொலை
‘ஷர்மா அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’, ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை துனிஷா (20).
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே நடிகை துனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் நடிகை துனிஷா ஷர்மாவின் உடல் ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. "பிரேத பரிசோதனை அதிகாலை 4:30 மணி வரை நடத்தப்பட்டது. இந்த பிரேத பரிசோதனையில் 4-5 போலீசாரும் உடனிருந்தனர்.
துணை நடிகர் கைது
இந்நிலையில், போலீசார் நடிகை துனிஷாவின் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நடிகை துனிஷா ஷர்மா தூக்கில் தொங்கியதாகக் கூறப்படும் இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக துணை நடிகர் ஷீசன் கானை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, நடிகர் ஷீசன் கானை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை துனிஷா ஷர்மாவின் மரணம் வழக்கு, கொலை மற்றும் தற்கொலை ஆகிய இரு கோணங்களில் போலீசார் நடத்தி வருகின்றனர்.
நடிகை துனிஷா ஷர்மா கர்ப்பமா...?
இந்நிலையில், நடிகை துனிஷா ஷர்மா கர்ப்பமாக இருந்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பல வதந்திகள் தற்போது கிளப்பி வருகின்றனர். ஆனால், துனிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் தற்கொலை செய்து கொண்ட நடிகை துனிஷா ஷர்மா, கர்ப்பமாக இல்லை என்றும், தூக்கில் தொங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
காதல் முறிந்ததால் மன அழுத்தத்தில் இருந்து வந்த துனிஷா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துனிஷா ஷர்மாவின் உடல் இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கிறது.
இளம் நடிகையான துனிஷா ஷர்மாவின் திடீர் மரணம் பாலிவுட் சினிமாத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், துனிஷாவின் ரசிகர்கள் இச்செய்தியால் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.