நடிகை துனிஷாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட காதலனின் தாய்... - வைரலாகும் வீடியோ...!

Viral Video Death
By Nandhini Dec 27, 2022 12:48 PM GMT
Report

நடிகை துனிஷாவின் இறுதிச்சடங்கில் கைது செய்யப்பட்டுள்ள காதலன் ஷீசன் கானின் தாய் கலந்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை துனிஷா தற்கொலை

‘ஷர்மா அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’, ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை துனிஷா (20).

இவர் 2 நாட்களுக்கு முன்பு தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே நடிகை துனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக துணை நடிகரும், துனிஷாவின் காதலருமான ஷீசன் கானை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

tunisha-sharma-boyfriend-mother-attended-funeral

இறுதிச்சடங்கில் காதலனின் தாய்

இந்நிலையில், காதலன் ஷீசன் கானின் சகோதரியும், தாயும் கடந்த ஞாயிற்றுக்கிழமை துனிஷா ஷர்மாவின் இறுதிச் சடங்கிற்கு வந்தனர். அவர்கள் மீரா ரோடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். அவர்கள் முகத்தை முகமூடியால் மூடிக்கொண்டிருந்தனர்.

தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.