என் மகளை ஷீசன் கான் படப்பிடிப்பில் தளத்தில் அடித்தார்... - நடிகை துனிஷா தாய் கதறல்...!

Death
By Nandhini Dec 30, 2022 10:27 AM GMT
Report

என் மகளை ஷீசன் கான் படப்பிடிப்பில் தளத்தில் அடித்தார் என்று நடிகை துனிஷா தாயார் குற்றம் சாட்டி கதறி அழுதுள்ளார்.

பிரபல நடிகை துனிஷா தற்கொலை

‘ஷர்மா அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’, ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை துனிஷா (20).

இவர் கடந்த சனிக்கிழமை தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே நடிகை துனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக துணை நடிகரும், துனிஷாவின் காதலருமான ஷீசன் கானை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும் பிரிந்த 2 வாரங்களுக்குப் பிறகு, சனிக்கிழமை மாலை துனிஷா இறந்தார். இது தற்கொலை என்று காவல்துறை தீர்ப்பளித்தது. இருப்பினும், தனது மகள் மரண வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷீசன் கான் போதைப்பொருள் உட்கொள்வதாக உயிரிழந்த தொலைக்காட்சி நடிகை துனிஷா ஷர்மாவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

tunish-sharma-death-sheezan-khan-mother-cry

நடிகை துனிஷா தாயார் கதறல்

இந்நிலையில், இன்று நடிகை துனிஷாவின் தாயார் வனிதா ஷர்மா இந்த வழக்கு தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

துனிஷா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, காதலன் ஷீசன் கானுடன் சண்டையிட்டதாகவும், அது உடல் ரீதியாக மாறியதாகவும், ஷீசன் தன்னை தாக்கியதாகவும் கூறியதாக துனிஷாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது -

என் மகள் தற்கொலை செய்து கொள்ள முடியாது. 10-15 நிமிடங்களில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஷீசனின் ஒப்பனை அறையில் அது நடந்ததிலிருந்து அவன் என் குழந்தையை என்ன செய்தான் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.

அவர்கள் பிரிந்த நாளில், ஷீசன் என் மகளை அடித்தான். என்னை ஷீசன் பயன்படுத்திக்கொண்டார் என்று என் மகள் என்னிடம் அழுதாள். ஆரம்பத்தில் ஷீசனை எனக்கு பிடிக்கும் என்று அவள் என்னிடம் சொன்னாள் என்று தெரிவித்துள்ளார்.