தற்கொலை செய்த துனிஷாவை தூக்கிக்கொண்டு ஓடிய காதலன்... - சிசிடிவி வீடியோ வைரல்...!

Death
By Nandhini Dec 28, 2022 06:25 AM GMT
Report

தற்கொலை செய்துக்கொண்ட பிறகு நடிகை துனிஷாவை காதலன் தூக்கிக்கொண்டு ஓடும் சிசிடிவி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை துனிஷா தற்கொலை

‘ஷர்மா அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’, ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை துனிஷா (20).

இவர் கடந்த சனிக்கிழமை தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே நடிகை துனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக துணை நடிகரும், துனிஷாவின் காதலருமான ஷீசன் கானை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறுதிச்சடங்கில் காதலனின் தாய்

காதலன் ஷீசன் கானின் சகோதரியும், தாயும் கடந்த ஞாயிற்றுக்கிழமை துனிஷா ஷர்மாவின் இறுதிச் சடங்கிற்கு வந்தனர். அவர்கள் மீரா ரோடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். அவர்கள் முகத்தை முகமூடியால் மூடிக்கொண்டிருந்தனர்.

tunish-sharma-death-sheezan-khan-cctv-video

துனிஷாவை தூக்கிக்கொண்டு ஓடிய காதலன்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மறைந்த துனிஷா ஷர்மாவின் காதலன் ஷீசன் கான், அவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு மருத்துவமனைக்குச் செல்ல உதவி செய்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.