நடிகை துனிஷா தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் - காதலன் ஷீசன் கான் குறித்து திடுக்கிடும் தகவல்...!
நடிகை துனிஷா தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது காதலன் ஷீசன் கான் குறித்து வெளியான பல திடுக்கிடும் தகவல்களை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை துனிஷா தற்கொலை
‘ஷர்மா அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’, ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை துனிஷா (20). இவர் கடந்த சனிக்கிழமை தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே நடிகை துனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக துணை நடிகரும், துனிஷாவின் காதலருமான ஷீசன் கானை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது மகள் மரண வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷீசன் கான் போதைப்பொருள் உட்கொள்வதாக உயிரிழந்த தொலைக்காட்சி நடிகை துனிஷா ஷர்மாவின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.
வெளியான பல திடுக்கிடும் தகவல்
காதலன் ஷீசன் கான் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,
ஷீசன் கான் துனிஷா ஷர்மாவுடன், மற்றொரு காதலியாக இருந்த பழைய வாட்ஸ்அப் அரட்டைகள் நீக்கியுள்ளார். ஷீசன் கானுக்கு இன்னொரு காதலி இருந்தது தற்போது உறுதியாகியுள்ளது.
துனிஷா ஷர்மாவுடனான பழைய வாட்ஸ்அப் அரட்டைகளையும் ஷீசன் நீக்கியுள்ளார். ஷீசன் கான், துனிஷா ஷர்மாவை ஹிஜாப் அணியும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
துனிஷா இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவருடன் ஷீசன் பேசியுள்ளார். ஷீசன் விசாரணையின் போது கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை. நடந்துகொண்டிருக்கும் விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை. இந்த வழக்கின் விசாரணையின் போது 2 ஐபோன்கள் உட்பட 3 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஷீசன் ஒரு 'ரகசிய காதலி'யுடன் வாட்ஸ் அப்பில் அரட்டையடித்துள்ளார். துனிஷா இறந்த நாளில் ஷீசன் தனது 'ரகசிய காதலியுடன்' 2 மணி நேரம் பேசியுள்ளார்.
ஷீசன் தூண்டுதலால், துனிஷா 'ஹிஜாப்' அணியத் தொடங்கினார். துனிஷாவுக்கும், ஷீசானுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை அறிய, அவரது மரணத்திற்கு உடனடி ஓட்டத்தில், போலீசார் இருவருக்கும் இடையேயான வாட்ஸ்அப் அரட்டைகளை ஸ்கேன் செய்தனர் என்றனர்.