ஒரு மீனின் விலை ரூ.28 கோடியா? அப்படியென்ன ஸ்பெஷல் இதில்!
டுனா மீன், 28 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
டுனா மீன்
புத்தாண்டை ஒட்டி டோக்கியோவில் நடந்த மீன் ஏலத்தில், 234 கிலோ எடையிலான டுனா மீன் இந்திய மதிப்பில் 28 கோடியே 87 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு கிலோ டுனா மீன் இந்திய மதிப்பில் 12 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.

டுனா மீனை கியோமுரா கார்ப்பரேஷன் கைப்பற்றியது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கியோஷி கிமுரா, ‘சுஷி சான்மை’ (Sushi Zanmai) என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ.11 கோடிக்கு டூனா மீனை ஏலத்தில் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
28 கோடி ரூபாய்
இந்த ஆண்டு ரூ.28 லட்சத்திற்கு மீனை ஏலத்தில் எடுத்து தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். புரதச்சத்து, வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்து காணப்படும் டுனா மீன் ஜப்பானியர்களின் விருப்ப உணவாக காணப்படுகிறது.
இவர்களின் பிரதான உணவான சூஷி, ஷசிமி உள்ளிட்டவற்றில் டுனா மீன்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால், இனப்பெருக்கம் குறைவு, அதிகளவில் மீன் பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் அழிவின் விளிம்பில் டுனா மீன் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.