தமிழின் தொன்மையை கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது, நன்றாக எரியட்டும்! அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி!

keeladi byte tuklak paper minister tennarasu
By Anupriyamkumaresan Jul 29, 2021 10:24 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கட்டுரை
Report

கீழடி அகழாய்வு உருவானது எப்படி? 

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை 2013-14 ஆம் ஆண்டில் வைகை நதிக்கரையில் ஓர் ஆய்வு மேற்கொண்டது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வழியே 250 கி.மீ.தூரம் ஓடும் வைகை நதியின் இருகரைகளிலும் உல்ல 400 கிராமங்களிலும் இந்த ஆய்வு மேற்கொண்டது.

தமிழின் தொன்மையை கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது, நன்றாக எரியட்டும்! அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி! | Tuklak Paper Against Keeladi Ministertennarasubyte

ஓர் ஆண்டு முழுவதும் இந்த 400 கிராமங்களில் அலைந்து திரிந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அவர்கள் 263 புதை மேடுகளையும், 90 வாழ்விடங்களையும் இனம் கண்டார்கள்.

கீழடி தமிழர்களின் தாய் மடி என்ற சொல்லுக்கு ஏற்ப தினமும் பல பொருட்களை அகழாய்வில் கொடுத்து நம்மை பெருமைப்படுத்தி வருகிறது.

கீழடி வெட்டி வேலை - கொச்சைப்படுத்திய பத்திரிகை, கொந்தளித்த மக்கள்! 

இந்த நிலையில் கீழடி நாகரிகத்தினையும் அகழ்வாராய்ச்சியினையும் கொச்சை படுத்தும் வகையில் துக்ளக் பத்திரிகை எழுதிய கட்டுரை தமிழ் ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழின் தொன்மையை கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது, நன்றாக எரியட்டும்! அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி! | Tuklak Paper Against Keeladi Ministertennarasubyte

அவர்களது கட்டுரைக்கு தொல்பொருள் ஆய்வு வெட்டு வேலை என்று தலைப்பிட்டு, அதில் எங்கு தோண்டினாலும் வெறும் மண்டை ஓடுகளும் ஆயுதங்களும் கிடைக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கண்ட தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது ஆதங்களையும், வெறுப்புகளையும் சமூக வலைதளங்களில் கொட்டி தீர்த்து வருகின்றனர்.

வேலையற்றவர்கள் எழுதுவதற்கு கவலைப்பட வேண்டாம்:

இந்த நிலையில் இது குறித்து, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நம்முடைய தொன்மையை நிரூபிக்கும் வகையில் தொல்லியல் சான்றுகள் கிடைக்கும்போது அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு சிலருக்கு மனம் வருவதில்லை என்றும் தமிழின் பெருமை உலகளாவிய அளவில் தெரியவருவது குறித்து சிலருக்கு வயிறு எரிகிறது, நன்றாக எரியட்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழின் தொன்மையை கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது, நன்றாக எரியட்டும்! அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி! | Tuklak Paper Against Keeladi Ministertennarasubyte

மேலும், நாங்கள் தொடர்ந்து இந்த அகழாய்வை மேற்கொள்வோம், இந்த அகழாய்வு தேவையற்றது என சில வேலையற்றவர்கள் எழுதுவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.