பிரியா மரண வழக்கு : ஜாமீன் கேட்டு மருத்துவர்கள் மனு

By Irumporai Nov 18, 2022 06:18 AM GMT
Report

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சர் இறந்த மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

பிரியா மரண வழக்கு

இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு மருத்துவர்கள் காரணம் என கூறப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

மருத்துவர்கள் ஜாமீன் மனு 

மேலும் மாணவி பிரியா பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்ட சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்கு பதிந்துள்ளனர்.