என்னுடைய முதலாளியே என் மனைவியும் மகளும்தான் : டிடிவி தினகரன்
எந்த வீட்டில் பெண்களிடம் அதிகாரம் இருக்கிறதோ அந்த வீட்டின் ஆண்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்றது. அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் சி.ஆர்.சர்ஸ்வதி, வளர்மதி ஜெபராஜ் மற்றும் மகளிர் அணியை சார்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எஜமானர்கள்
விழாவில் பேசிய டி.டி.வி.தினகரன்,‘மறைந்தாலும் தமிழ் பேசும் மக்கள் உள்ளத்தில் அம்மா தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போல மாபெரும் தலைவர்கள் உருவாகவில்லை. உருவாகவும் முடியாது. அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப காலம் சிலரை அடையாளம் காட்டும். அவர்களைப் பின்தொடர்ந்து வர முடியுமே தவிர அவர்களாக மாற முடியாது.
ஜெயலலிதாவை, எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிட்டு பேசும்போது எனக்கு சிரிப்புதான் வருவதாகவும் கூறிய தினகரன்
இப்போது என் மனைவியும், என் மகளும் தான் என் எஜமானார்கள். கல்யாணம் ஆகி 30 ஆண்டுகள் ஆகிறது, இதுவரை நான் தனியாக துணி கூட எடுத்ததில்லை. எனக்கு டெய்லர் கூட அவர்கள் சாய்ஸ் தான் என்று தன் மனைவி அனுராதா மற்றும் மகள் ஜெயஹரிணி ஆகியோர் குறித்து பேசினார்.