பழனிசாமியை முதல்வராக்கவா விஜய் வருமானத்தை விட்டு வந்தார்? டிடிவி தினகரன்
பழனிசாமியை முதல்வராக்கவா விஜய் பல கோடி ரூபாய் வருமானத்தை விட்டு வந்தார் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெகவுடன் கூட்டணி
திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “விஜயை சிலர் கூவி கூவி அழைக்கின்றனர்.

கூட்டணிக்கு விஜய் ஒப்புக்கொண்டால் அதிமுக பாஜகவை விட்டுவிடும். பழனிசாமியை முதல்வராக்குவதற்கு விஜய் அவரை தோளில் தூக்கி அலையப்போகிறாரா? பழனிசாமி தலைமையை விஜய் ஏற்றுக்கொண்டால் அது தற்கொலைக்கு சமம்.
டிடிவி விமர்சனம்
தொண்டர்களை உற்சாகப்படுத்த பழனிசாமி ஏதேதோ கூறிவருகிறார். கூட்டணிக்கு வாங்க... வாங்க... என பழனிசாமி கூவி கூவி அழைப்பதை தமிழக மக்கள் நகைக்கிறார்கள்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கேற்ப பழனிசாமி நிச்சயம் பலனை அனுபவிப்பார். 2026 தேர்தலில் பழனிசாமி நிச்சயமாக வீழ்த்தப்படுவார். அதை செய்யப்போவது அமமுக இடம்பெறும் கூட்டணிதான்.
சுவை கண்ட பூனை போல விஜயை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைக்கிறார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கவா விஜய் பல கோடி ரூபாய் வருமானத்தை விட்டு வந்தார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.