ஜெயலலிதா சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவர் டிடிவி தினகரன் - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

TTV Dhinakaran
By Thahir 3 நாட்கள் முன்

ஜெயலலிதா சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவர் டிடிவி தினகரன் என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

செய்தியாளர்களை சந்தித்த அவர், சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். அதனால் தான் டிடிவி தினகரன் வீட்டைவிட்டு ஜெயலலிதா விரட்டியடித்தார்.

DTV Dhinakaran was the reason why Jayalalithaa went to jail

அம்மாவுக்கும் துரோகம் செய்தவர். அவர் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை. டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் இன்று அனாதையாக உள்ளனர்.

அவரை நம்பியவர்கள் தான் ஏமாந்து போனார்கள். எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார்.

அதிமுக கட்சியை காப்பாற்றினார். 75 உறுப்பினர்களை பெற்று சாதனை பெற்று இருக்கிறார். தினகரன் நடத்துவது கட்சி அல்ல, கோஷ்டி என்றார்.