தவெக-வுடன் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் விரும்பினார்: செங்கோட்டையன்
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விரும்பியதாக தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்துக்கு வருகை தந்த போது செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், அதிமுக கட்சி அண்ணாவை, எம்ஜிஆரை, ஜெயலலிதாவை மறந்துவிட்டனர், அதனால் தான் தவெக-வில் இணைத்துக்கொண்டேன். என் பாக்கெட்டில் ஜெயலலிதாவின் படம் தான் உள்ளது, வளர்த்துவிட்டவர்களை மறந்துவிடக்கூடாது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எங்களோடு இணைய நினைத்தார், ஆனால் அதை நடக்காமல் போய்விட்டது.
எங்களுடன் யார் பேசினாலும் பாஜக வந்துவிடுகிறது, என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தான் தெரியும், நாங்கள் சொல்லாமல் இருப்பது நல்லது. எங்கு சென்றாலும் வாழ்க என தெரிவித்தார்,
ராமதாஸ் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தொடர்பான கேள்விக்கு நல்லது நடக்கட்டும் என பதிலளித்தார்.
இந்நிலையில் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
