இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் ஆஜராக டெல்லி புறப்பட்டார் டிடிவி.தினகரன்

Delhi T. T. V. Dhinakaran
By Thahir Apr 22, 2022 04:21 AM GMT
Report

 இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக மீண்டும் டெல்லி புறப்பட்டார் டிடிவி.தினகரன்.

ஆர்,கே.நகர் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற சுகேஷ் சந்திரசேகரிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக கூற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.லஞ்சம் கொடுத்ததை நேரில் பார்த்ததாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபிநாத் ,மோகன்ராஜ் வாக்குமூலம் அளித்த நிலையில்,

வழக்கறிஞர் கோபிநாத் ,மோகன்ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.ஆனால் இந்த வழக்கின் திடீர் திருப்பமாக வழக்கறிஞர் கோபிநாத் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் தினகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக டிடிவி தினகரன் மீண்டும் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.