"தேவையில்லாமல் என் சித்தி மீது பழி போட்டார்கள்" - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

ttvdinakaranpressmeet ttvdinakaransasikala
By Swetha Subash Mar 07, 2022 02:38 PM GMT
Report

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உடல்நலக்குறைவால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தார் என்பது தான் உண்மை.

ஜெயலலிதாவின் மரணம் அரசியலாக்கப்பட்டுள்ளது. எந்த முடிவாக இருந்தாலும் ஜெயலலிதாவே எடுத்திருப்பார். தேவையில்லாமல் எங்கள் சித்தி மீது பழிபோட்டு எதோ பண்ணிப் பார்த்தார்கள்.

அது நடக்கவில்லை. இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகியுள்ளது என்றும் குற்றசாட்டினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இன்று மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், உடல்நலக்குறைவால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை.

மற்றவர்களுக்கு நம்மால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக போராட்டங்களை கூட தவிர்த்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளில் இறங்கியுள்ளோம்.

முதற்கட்டமாக வரும் 18ம் தேதி முதல், கட்சி பொறுப்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து மார்ச் 14 ஆம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றும்

உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு முறையாக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார். மேலும், திமுகவுக்கு வாக்களிக்க கூடாது என மக்கள் முடிவெடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.