லண்டனில் எனக்கு சொத்து இருந்தால், அதனை அரசுடமையாக்கலாம்: டி.டி.வி.தினகரன் பரபரப்பு தகவல்

TTV Dhinakaran
By Irumporai Apr 16, 2023 12:09 PM GMT
Report

லண்டனில் எனக்கு சொத்து இருந்தால் அதை தாராளமாக அரசுடமையாக்கலாம் என்றும் அல்லது நானே அரசுடைமை ஆக்கி தருகிறேன் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

   டிடிவி தினகரன்

திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் டிடிவி தினகரனுக்கு லண்டனில் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

லண்டனில் எனக்கு சொத்து இருந்தால், அதனை அரசுடமையாக்கலாம்: டி.டி.வி.தினகரன் பரபரப்பு தகவல் | Ttv Dinakaran Says About His London Property

விளக்கம்

இது குறித்து விளக்கம் அளித்த டிடிவி தினகரன், லண்டனில் எனக்கு சொத்து இருந்தால் அதை தாராளமாக அரசுடமையாக்கலாம் என்றும் அல்லது அந்த சொத்து இருப்பதை நிரூபித்தால் அந்த சொத்தை நானே அரசுடமையாக்கி தருகிறேன் என்றும் கூறினார்.

மேலும் ஓபிஎஸ் நடத்தும் திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்தால் அதில் கலந்து கொள்வது குறித்து ஆலோசிப்பேன் என்றும் அவர் கூறினார்.