தவெக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் பேரழிவு- டிடிவி தினகரன்
TTV Dhinakaran
By Fathima
அமமுக எம்எல்ஏ தங்களது ஆதரவு கடிதம் வழங்கியதாக தவெக வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் டிடிவி தினகரன்.
செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அமமுக எம்எல்ஏ காமராஜ் தவெகவிற்கு ஆதரவு கடிதத்தில் கையெழுத்து போட்டதாக கூறும் வீடியோவை எடுத்தது யார்?
எங்கு வைத்து எடுக்கப்பட்டது? வீடியோ எடுத்தது விஜயா? செங்கோட்டையனா? சொல்லுங்கள் அந்த ஆதரவு கடிதம் எங்கே?
இந்த வீடியோவின் ஒரிஜினல் இருந்தால் தரமுடியுமா? AI வீடியோவாக இருக்கலாமே?
முதலமைச்சர் ஆவதற்கே இப்படி என்றால் ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் பேரழிவு உறுதி.
போலி கடிதம் விவகாரத்தை சும்மாவிட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.