விஜய் வந்த வேலையை மட்டும் பார்க்கட்டும்: டிடிவி தினகரன்

TTV Dhinakaran
By Fathima Feb 03, 2026 12:20 PM GMT
Report

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளான இன்று அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடயத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த போது, நாங்கள் அம்மாவால் வளர்க்கப்பட்டவர்கள், எங்களுக்கு யாரையும் கண்டு பொறாமை கிடையாது, அச்சமும் கிடையாது.

தமிழையும், திராவிடத்தையும் கேடயமாக வைத்து தமிழ் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறது திமுக, எங்கு பார்த்தாலும் போதைப்பொருள், எவருக்கும் பாதுகாப்பு இல்லை.

தேர்தல் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்: அண்ணாமலை

தேர்தல் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்: அண்ணாமலை


இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும், ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை வாங்கி விடலாம் என திமுக நினைக்கிறது.

விஜய் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்றால் அந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும், ரோல் மாடல் எம்ஜிஆர், ஜெயலலிதா என கூறிக்கொண்டு ஊழல் ஆட்சி என்கிறார்.

அம்மாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்பதற்காக ஒன்றிணைந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.