தவெக மீது டிடிவி தினகரன் பொலிசில் புகார்

TTV Dhinakaran TVK
By Fathima May 09, 2026 03:47 AM GMT
Report

தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதால் அமமுக பெயரில் போலி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் டிடிவி தினகரன்.

நேற்று இரவு இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினரகன், மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ்.

அவர் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதால் போலியான கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது.

தவெக மீது டிடிவி தினகரன் பொலிசில் புகார் | Ttv Dinakaran File Complaint About Tvk

இதுகுறித்து காமராஜிடம் விசாரித்த போது, அதுபோன்ற கடிதத்தை வழங்கவில்லை என கூறியுள்ளார்.

இத்தகவல் தெரிந்து போலியான கடிதமாக இருக்கும் என ஆளுநர் மாளிகைக்கு புகாரளிக்க வந்தேன், அப்போது காமராஜை தொடர்பு கொள்ள முடியாததால் அவர் காணவில்லை என பேட்டியளித்தேன்.

இதை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அவர் ஆளுநரிடம் புகார் அளித்தார் தூய சக்தி என கூறிக்கொள்பவர்கள் மோசடியாக கடிதம் தயாரித்து அளித்துள்ளனர், இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து கிண்டி காவல் நிலையத்தில் டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளார், இதற்கிடையே தவெகவுக்கு ஆதரவளிப்பதாக காமராஜ் ஒரு கடிதத்தில் கையெழுத்திடும் வீடியோவை தவெக தரப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவெக மீது டிடிவி தினகரன் பொலிசில் புகார் | Ttv Dinakaran File Complaint About Tvk

பரபரப்பான தமிழ்நாடு அரசியல் களம், அடுத்து நடக்கப்போவது என்ன?