துறையை மாற்றினால் ராஜகண்ணப்பன் புனிதராகிவிடுவாரா? - டிடிவி தினகரன் விமர்சனம்
அமைச்சர் ராஜ கண்ணப்பன் துறை ரீதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த மே மாதம் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ராஜகண்ணப்பன் முதுகுளத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதியின் பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது. ஏற்கனவே இவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் ராஜகண்ணப்பனின் துறை மாற்றப்பட்டது.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா? (3/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 29, 2022
போக்குவரத்துத்துறையில் இருந்து அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா?. எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா?.
தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? 'எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா? என சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றபின்பு நடக்கும் முதல் அமைச்சரவை மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.