இரட்டை இலை லஞ்ச விவகாரம் : அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் டிடிவி தினகரன்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜராகியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்தார், பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ஆஜராகியுள்ள டிடிவி தினகரனிடம் சின்னம் வழங்க சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தபட்டு வருகிறது.இந்த வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆஜரானார். ஏற்கனவே இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சம்மன் அனுப்பப்பட்டால் விசாரணைக்கு ஆஜராவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இரட்டை இலை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை டிடிவிக்கு சம்மன் அனுப்பிய நிலையில், இன்று ஆஜராகியுள்ளார்