நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும என டிடிவி தினகரன் வலியுறுதியுள்ளார்.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை போல, நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே 'நீட்' தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என தான் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், 2010ஆம் ஆண்டு மத்திய அரசில் தி.மு.க அங்கம் வகித்த போது ஏழை,எளிய கிராமப்புற
மாணவர்களின் 'டாக்டர்' கனவை சிதைக்கும் ' நீட்' தேர்வை கொண்டுவந்த தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள
தற்போது கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்திட வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.