பழைய நண்பர் - அவரின் நிலை வருத்தம் தான் - நல்ல உடல்நலத்துடன் வெளிய வரணும் - டிடிவி..!
சிறையில் இருக்கும் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூலை மாதத்தில் அமலாக்கத்துறையால் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் ஜாமீனுக்காக போராடி வருகிறார்.
சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், அண்மையில் கூட அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
டிடிவி கருத்து
இந்நிலையில், தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் செந்தில் பாலாஜி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், செந்தில் பாலாஜி பழைய நண்பர் என்று குறிப்பிட்டு, ஜெயலலிதா காலத்தில் இருந்தே எங்களுடன் பயணித்தவர் என்றார்.
கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப் போல செந்தில் பாலாஜிக்கு நடந்துள்ளது என்று விமர்சித்த அவர், சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது அவரை பார்த்தால் ஒரு நண்பராக தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது என்று வேதனைப்பாட்டார்.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து நல்ல உடல்நலனோடு வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களின் பிரார்த்தனை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.