எடப்பாடி பேரம் பேசுறார்; டிடிவி தினகரன் அதிரடி முடிவு - பகிரங்க அறிவிப்பு!

TTV Dhinakaran
By Sumathi Aug 08, 2023 03:09 AM GMT
Report

திமுகவுடன் எடப்பாடி பேரம் பேசுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்

சென்னை வானகரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பழகன் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

எடப்பாடி பேரம் பேசுறார்; டிடிவி தினகரன் அதிரடி முடிவு - பகிரங்க அறிவிப்பு! | Ttv Dinakaran About Alliance Without Bjp And Admk

இதில், துணை பொதுச் செயலாளர்கள் ஜி. செந்தமிழன், ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனும், கட்சியின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலும்,

 கூட்டணி

கட்சியின் துணைத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகனும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பேசிய டி.டி.வி. தினகரன், “எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் தரப்பினர் திமுகவின் தயவில் இருக்கின்றனர். தவறு செய்த எடப்பாடியும் தவறு செய்து கொண்டிருக்கும் தி.மு.கவும் ஒரே அணியில் இருக்கின்றனர். தீய சக்திகளை வெல்வதற்கு வியூகத்தை அமைத்து வருகிறேன்.

மக்களவை தேர்தலில் பிரதமரை முன்னிலைப்படுத்தும் அணியுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம், இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம். இந்த கூட்டத்தில் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தொடர் பிரச்சாரங்கள் நடத்துவது,

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.