ஆவின் பால் நிறுத்த போராட்டம்.. அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
பால்நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ,மக்களைப் பாதிக்கும் வகையில் பால் விலையை உயர்த்தக் கூடாது ,என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆவின் போராட்டம்
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தவேண்டுமென பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்தனர்,அடுத்த படியாக பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் நேற்று அமைச்சர் நாசருடன் பேச்சுவார்த்தை நடத்தினர் .அப் பேச்சுவார்தையில் , ஆவின் பால் கொள்முதல் விலை பசும்பாலுக்கு ரூ .20 சேர்த்து ரூ .55 ஆகவும் எருமைபாலுக்கு ரூ .24 சேர்த்து ரூ.68 ஆக உயர்த்திட வேண்டும் என கூறினார்கள் . பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் . பால் நிறுத்தப் போராட்டத்தினை அறிவித்தனர் .
தினகரன் ட்வீட்
பால் நிறுத்தப் போராட்டம் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆவின் பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பால்நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
சென்னையில் பால்வளத்துறை அமைச்சருடன் பால் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பதையடுத்து பால் நிறுத்தப் போராட்டம் தொடரும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். (1/3) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 17, 2023
எனவும் ,
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் மக்களைப் பாதிக்கும் வகையில் பால் விலையை உயர்த்தக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றேன்.
என்று தனது ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவுசெய்துள்ளது கவனத்தைப் பெற்று உள்ளது