'' கடன் தள்ளுபடியில் திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது" - டிடிவி தினகரன் கண்டனம்
நகைக்கடன் தள்ளுபடியில் திமுக அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார். நகைக்கடன் தள்ளுபடி கோரி விண்ணப்பித்த 48.84 லட்சம் பேரில், 35.37 லட்சம் பேர் தகுதியில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகைக்கு கீழ் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யபடும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 20 சதவீதம் பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடி தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற்றிருந்தால் நகை கடன் தள்ளுபடி சலுகை பெற முடியாது என்றும் நகை கடன் தள்ளுபடி தொடர்பான கள ஆய்வு சேலம் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் முடிந்து உள்ளது என்றும் கூட்டுறவு துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடியில் தி.மு.க அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடியில் தி.மு.க அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது. (1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 29, 2021
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி தெளித்து அதிகாரத்திற்கு வந்துவிட்டு, இப்போது அதிலிருந்து தப்பிக்க காரணங்களைத் தேடுவது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
எனவே, பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க என்றாலே தில்லுமுல்லு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.