திருமாவளவனை முதல்வராக்க அதிமுக முயற்சித்தது - டிடிவி தினகரன்

Thol. Thirumavalavan ADMK TTV Dhinakaran
By Karthikraja Oct 24, 2026 02:06 PM GMT
Report

ttv dhinakaran says we tried to make thirumavalavan as cm: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தவெக 108 இடங்கள் வெற்றி பெற்று எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை நிலையில், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்ததாக தவெக உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஆனால், திமுக மற்றும் அதிமுக இந்த குற்றச்சாட்டை மறுத்தது.

இந்நிலையில், திருமாவளவனை முதல்வராக்க அதிமுக முயற்சித்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவனை முதல்வராக்க அதிமுக முயற்சி

மருதுபாண்டியர்களின் நினைவு தினமான இன்று, சிவகங்கையில் உள்ள அவரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

திருமாவளவனை முதல்வராக்க அதிமுக முயற்சித்தது - டிடிவி தினகரன் | Ttv Dhinakaran Says We Tried Thirumavalavan As Cm

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், "திராவிட கட்சிகளுக்கு மாற்றாக கொண்டுவர வேண்டும் என்பதற்காக பேரிடரை, பெரும் ஆபத்தான ஆட்சியை தமிழகத்துக்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

வெறும் சினிமா மாயையை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். நிழலில் ஹீரோவாக இருந்தவர், நிஜத்தில் வில்லனாக உருமாறி வருகிறார்.

அன்றைக்கு கம்யூனிஸ்டுகளோ, திருமாவளவனோ ஆதரவளிக்காமல் விட்டிருந்தால், முதல்வர் விஜய்யால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. அக்கட்சிக்கு107 பேர்தான் இருக்கிறார்கள். 

திருமாவளவனை முதல்வராக்க அதிமுக முயற்சித்தது - டிடிவி தினகரன் | Ttv Dhinakaran Says We Tried Thirumavalavan As Cm

அப்பொழுது திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முயற்சி செய்ய மாட்டோம் என்று ஸ்டாலின் வெளிப்படையாகச் சொன்னார். திமுகவின் ஆதரவை நாங்கள் கேட்கவில்லை.

அப்பொழுது கம்யூனிஸ்டுகள், எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தால் அது பாஜகவை ஆதரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடும் என்பதால் அவர்கள் பின்வாங்கினார்கள்.

அதற்கு அடுத்த முன்மொழிவுதான், நண்பர் திருமாவளவனை முதலமைச்சராக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் முயற்சி செய்தோம். இது தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அல்ல.

தவெகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போகின்ற பட்சத்தில், எங்கள் எம்எல்ஏக்களைத் திருட முயற்சி செய்கின்ற பட்சத்தில், அதையெல்லாம் தடுத்து நிறுத்தி அவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக தான் முயற்ச்சித்தோம்" என தெரிவித்தார்.

"தனுஷ் அதிமுகவிற்கு வருகிறாரா?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஒரு நடிகர் வந்துதான் அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் இல்லை. திரை நட்சத்திரங்கள் அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பது காலம் காலமாக இருந்து வருவதுதான். நடிகர்களை கட்சிக் கொள்கையைப் பரப்புவதற்காகப் பயன்படுத்துவது இயற்கை" என தெரிவித்துள்ளார்.