சசிகலா பிப்ரவரி 8-ம் தேதி தமிழகம் திரும்புகிறார்! டிடிவி தினகரன் உறுதி

election stalin edappadi
By Jon Feb 08, 2021 03:52 PM GMT
Report

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கடந்த மாதம் 27-ம் தேதி பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையானார். கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலா சில தினங்களில் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் அதிமுக கொடியுடன் அவதரித்த சசிகலா தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். பிப்ரவரி முதல் வாரம் சசிகலா தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அந்தத் தகவலை டிடிவி தினகரன் உறுதிபடுத்தியுள்ளார்.

சசிகலா பிப்ரவரி 8-ம் தேதி தமிழகம் திரும்புகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், “புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, துயரங்களைத் தாங்கி, சோதனை நெருப்பாறுகளைக் கடந்து வரும், தியாகத்தலைவியின் வருகையை திருவிழா கோலம்பூண்டு வரவேற்போம்!

ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தீயசக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்திடுவோம்!”