முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்

Tamil nadu TTV Dhinakaran C Joseph Vijay
By Manchu Jun 08, 2026 03:20 AM GMT
Report

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அணிந்துவரும் கோட் சூட்டை வைத்து கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டுளாளர் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன்.

முதல்வர் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன், சில கட்சிகளின் கூட்டணியுடன் விஜய் முதல்வராக பதவி ஏற்று வருகின்றார்.

முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து விஜய் செய்யும் ஒவ்வொரு செயலும் துல்லியமாக எதிர்கட்சியினர், மற்ற கட்சியினரிடையே கண்காணிக்கப்படுகின்றது.

திருச்சி கிழக்கு தேர்தலில் போட்டியா? பரபரப்பை கிளப்பிய ராகவா லாரன்ஸின் அறிவிப்பு

திருச்சி கிழக்கு தேர்தலில் போட்டியா? பரபரப்பை கிளப்பிய ராகவா லாரன்ஸின் அறிவிப்பு

அதுமட்டுமின்றி முதல்வர் அணிந்து வந்த கோட், சூட் குறித்தும் அதிகமாக விவாதம் எழுந்துள்ளது. சட்டசபையில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்விற்கும் திருச்சியில் விஜய் பேசுகையில் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன் | Ttv Dhinakaran Criticise Tvk Government

டிடிவி தினகரன் விமர்சனம்

தவெக அரசு தவறுக்கு மேலம் தவறு செய்வதாக விமர்சித்துவரும் டிடிவி தினகரன், குதிரை பேரம் குறித்தும், அதிமுக தீந்து போன சக்தி என்பதை குறித்தும் பேசியுள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்து தனது பக்கம் விழ வைப்பதாகவும், சபாநாயகரும் அவர்களது ராஜினாமை ஏற்றுக் கொண்டதாகவும், இது சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன் | Ttv Dhinakaran Criticise Tvk Government

முதலமைச்சர் விஜய் கருப்பு மற்றும் வெள்ளையில் வருவதைக் குறித்தும், கருப்பு அதிகமாகவும், வெள்ளை குறைவாகவும் இருக்கின்றது. கருப்பு வேலையாக தான் அவர் இருக்கின்றார் என்று விமர்சனம் வைத்துள்ளார்.

தவெக-விற்கு மக்கள் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை அளித்துள்ளதாகவும், சரியாக ஆட்சி செய்யும் என்றும் கூறியுள்ளார்.