திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் - டிடிவி தினகரன்

DMK TTV Dhinakaran
By Thahir Nov 26, 2022 12:01 PM GMT
Report

அடிப்படையான திட்டங்களைக்கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் கண்டனம் 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், திருவாரூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ள ஊர்களில் அடிப்படையான திட்டங்களைக்கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

TTV Dhinakaran condemns DMK Govt.

100 நாள் வேலை ஒதுக்கீடு, சாலை வசதி உள்ளிட்ட அரசின் திட்டங்கள் அனைத்திலும் இந்த ஊராட்சிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். அப்படிச்செய்யாவிட்டால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை ஒன்றுதிரட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.