அடுத்த 3வது பெரிய அணி உருவாகி வருகிறது - டிடிவி தினகரன் பரபரப்பு தகவல்
துரோகத்தை வீழ்த்த மூன்றாவது பெரிய அணி உருவாகி வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தவெகவில் செங்கோட்டையன்
திண்டுக்கல், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய அமமுக துணைச் செயலாளர் தண்டபாணி இல்ல திருமண விழாவிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது பற்றி உங்கள் கருத்து?
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட தன்னுடன் பேசியபோது செங்கோட்டையன் தா. வெ.க வில் இணைவது பற்றியோ சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவது பற்றியோ எந்த ஒரு தகவலும் என்னிடம் சொல்லவில்லை. த.வெ.க வில் இணைவது அதிமுகவிற்கு பலவீனமா? என்ற கேள்விக்கு
டிடிவி தகவல்
பதிலளித்த டிடிவி தினகரன், தமிழக மக்களுக்கு தெரியும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் கட்சியினருக்கும் தெரியும். யாருக்கு பலவீனம் என்று, செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு மிகுந்த வருத்தத்திலேயே இருந்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தான் செங்கோட்டையனுக்கு துரோகம் விளைவித்துள்ளார். துரோகத்தை வீழ்த்துவதற்கான காலம் வரும், வருகின்ற தேர்தல் அதற்கான பதிலாக இருக்கும்,
தமிழகத்தில் இதுவரை யாரும் எதிர்பாராத அளவிற்கு மூன்றாவதாக மிகப்பெரிய கூட்டணி அமையும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.