விஜய் உடன் கூட்டணியா? - டிடிவி தினகரன் விளக்கம்
சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.
டிடிவி தினகரன்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்த அவர், "மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம். நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு.
அண்ணாமலை தலைவராக இருந்த போதுதான் பாஜக கூட்டணியில் இணைந்தோம். அவர் கூட்டணியை சரியாக கையாண்டார்.
தற்போதையை தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணி கட்சிகளை சரியாக கையாளவில்லை. ஓ.பன்னீர் செல்வதை மோடி சந்திக்காதது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் பதில் ஆணவமாக உள்ளது.
விஜய் கூட்டணி?
எங்களுக்கு உள்ள இடர்பாடுகளை களைந்தால் மீண்டும் கூட்டணியில் இணையலாம். திமுகவுடனும், சீமானுடனும் கூட்டணி இல்லை.
விஜய் உடன் கூட்டணி வைத்தால் என்ன? அவர் தலைமை தாங்க வேண்டும் என நினைக்க கூடாதா? விஜயை குறைத்து மதிப்பிட வேண்டாம்.
அரசியலில் எதுவும் நடக்கலாம். புதிய கூட்டணி அமையலாம். நாங்கள் இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெரும்" என தெரிவித்துள்ளார்.