அனைவர்க்கும் விபூதி அடித்த TTF....கையில கட்டே போடலையா..வைரல் வீடியோ..!!
விபத்தின் போது கையில் அடிப்பட்டு கட்டுபோடப்பட்டுள்ளதாக TTF வாசன் சுற்றிவரும் நிலையில், அது முற்றிலும் பொய்யென வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
TTF வாசன்
பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ஊர் ஊராக விலை உயர்ந்த பைக்குகளில் பயணம் செய்து அந்த அனுபவங்களை Twin Throttlers என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து பைக் சாகசம் செய்து வரும் இவர் அவ்வப்போது அதன் காரணமாக சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.
இந்நிலையில் தான் இவர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தின் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது சாகசம் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி இருக்கின்றார்.
கைது செய்த போலீஸ்
இந்த விபத்தில் இவருக்கு கை எலும்பு முறிந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு பின்னர், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றி ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்தான வீடியோ ஒன்றும் சமுகவலைதளபக்கத்தில் வெளியாக இது குறித்து பாலுசெட்டி சாத்திரம் காவல் துறையினர், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்ற காலை கைது செய்யப்பட்டார்.
ஹாயாக வளம் வந்த TTF
தொடர்ந்து, வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புழல் சிறையில் டிடிஎப் வாசன் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் பரிசோதனைக்காக டிடிஎப் வாசன் அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளநிலையில் டிடிஎப் வாசனுக்கு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெறுகிறது. கை மற்றும் கால்களில் காயங்கள் இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.
சோதனையின் முடிவில் கைதிகளுக்கான பிரத்யோக வார்டில் டிடிஎப் வாசன் அனுமதிக்கப்படுவாரா என்பது தெரியவரும். இதனிடையே காலையில் கட்டுடன் வலம் வந்த டிடிஎப் வாசன் தற்போது கட்டில்லாமல் நடந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.