தொடர்கதையான சிறைவாசம்...TTF வாசனுக்கு செக் வைத்து நீதிமன்றம்!!
பிரபல யூடியூபரான TTF வாசனுக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
TTF வாசன்
பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ஊர் ஊராக விலை உயர்ந்த பைக்குகளில் பயணம் செய்து அந்த அனுபவங்களை Twin Throttlers என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். அதிவேகமாக பைக்கை ஓட்டி தற்போதையை இளைஞர்களை அதிகமாக கவர்ந்துள்ள இவர், விரைவில் மஞ்சள் வீரன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாவுள்ளார்.
தொடர்ந்து பைக் சாகசம் செய்து வரும் இவர் அவ்வப்போது அதன் காரணமாக சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். கைது செய்த போலீஸ் இந்நிலையில் தான் தற்போது இவர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தின் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது சாகசம் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி இருக்கின்றார்.
இந்த விபத்தில் இவருக்கு கை எலும்பு முறிந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு பின்னர், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீட்டிக்கப்ட்ட நீதிமன்ற காவல்
இந்த விபத்து குறித்தான வீடியோ ஒன்றும் சமுகவலைதளப்பக்கத்தில் வெளியாக இது குறித்து பாலுசெட்டி சாத்திரம் காவல் துறையினர், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 19-ஆம் தேதி காலை அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த கைதை எதிர்த்து வாசன் தரப்பில் இரண்டு முறை ஜாமீன் பெற மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கிடையில் தான், இன்று அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவருக்கு நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.