மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிய TTF வாசன் : அபாரதாம் போட்ட காவல்துறை , ஏன் தெரியுமா?
சென்னையில் திரைப்படம் பார்ப்பதற்காக திரையரங்கிற்கு நம்பர் பிளேட் இல்லாத காரில் சென்ற TTF வாசனின் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
TTF வாசன்
யூடியூபர் டிடிஎஃப் வாசன் (Youtuber TTF Vasan) பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அவருக்கு என்று ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் வாசன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முனபு கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வாசன் வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்காக பல இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டது. போலீசார் அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்டதாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் பேனர்களும் அகற்றப்பட்டன.
பின்னர் அவர் 40 ரசிகர்களின் முகத்தை முதுகில் பச்சைக்குத்தி கொண்டார். இவ்வாறு தினமொரு சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் சென்னை வடபழனி கமலா திரையரங்கில் காலேஜ் ரோடு என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியை காண சென்ற அவர், நம்பர் பிளேட் இல்லாத காரில் சென்று மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கார் பறிமுதல்
தகவலறிந்த போக்குவரத்து போலீசார், TTF வாசன் வந்த காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த கார் TTF வாசன் நண்பர் பிரவீன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதையடுத்து நம்பர் பிளேட் இல்லாமல் காரை ஓட்டிய குற்றத்திற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியதற்கு ரூ.5,000 அபராதமும் என மொத்தம் ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டு, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
.